இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களுக்கும், நீலக்கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேப்பங்கிழங்கு ஆகிய காய்கறிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை இன்றுடன் அமலுக்கு வருகிறது.
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு
2013ஆம் ஆண்டில் ஏற்றுமதியான இப்பழங்கள் மற்றும் காய்கறிகளில் 200க்கும் அதிகமான ஏற்றுமதித் பெட்டிகளில், ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள வகையிலான பழ ஈக்களும், பூச்சிகளும் காணப்பட்டிருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஐரோப்பாவின் இந்தக் கவலைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே,இந்தத் தடையை திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாம்பழங்கள் ஐரோப்பிய சந்தையில் பெரிய அளவில் விற்கப்படுவதில்லை என்றாலும், இந்த தடை உள்ளூர் விவசாயிகளை பாதிக்கிறது.
ஏனெனில் ஏற்றுமதி செய்யாமல் உள்ளூர் சந்தையில் எஞ்சியுள்ள மாம்ழங்கள், உள்ளுர் சந்தையில் அதன் விலையைக் குறைக்கிறது.
(பிபிசி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக