சனி, 24 மே, 2014

கண்ணி வெடியால் கூட சிதைக்க முடியாத புதிய கார் மோடியின் பயணத்துக்கு தயார்...!!!!!

மோடியின் பயணத்துக்கு குண்டு துளைக்காத, கண்ணி வெடியில் சிக்கினாளும் பாதிப்படையாத நவீன பிஎம்டபிள்யூ கார் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமராக நரேந்திரமோடி 26ம் திகதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

மோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்பட்டு
நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும் நரேந்திரமோடி பயணம் செய்வதற்கு அதி நவீன முறையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரை துப்பாக்கி குண்டுகள் துளைக்காது, கண்ணி வெடியில் சிக்கினாலும் நொறுங்காத அளவுக்கு பலம் பொருந்தியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகள், வெடி குண்டுகள் போன்றவற்றின் வெப்பம் தாக்க முடியாத அளவுக்கு வெப்ப தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், வெடிகுண்டு போன்ற எந்த தாக்குதலின் போதும் பெட்ரோல் டேங்குகள் வெடித்து சிதறாது.

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் பிஎம்டபிள்யூ காரில் அழைத்துச் செல்ல அவரது பாதுகாப்புக்கு கமாண்டோ படை வீரர்கள் உடன் செல்வார்கள்.

இந்த கமாண்டோ படையில் குஜராத் பொலிஸ் படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் நரேந்திரமோடி பயணம் செய்யும் அந்த கார் முன் இருக்கையில் ஓட்டுனரின் அருகில் குஜராத் பொலிஸ் படையைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்து இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக