ஞாயிறு, 25 மே, 2014

மோடியின் அழைப்பை ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர்....!!!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மோடி பதவி யேற்பு விழாவில் சார்க் கூட்டமைப் பில் உள்ள நாடு களின் தலைவர்கள் அனைவரும் பங் கேற்பது உறுதி யாகியுள்ளது. ரேடியோ பாகிஸ் தான் ஒலி பரப்பு நிறுவனம், இந் தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் இந்திய அமைச்சரவை பதவியேற்பு
விழாவில் பாகிஸ்தான் பங்கேற்பது இதுவே முதன் முறை. பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரீப் பங்கேற்பது வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக