பாராளுமன்ற உறுப்பினரான தனது காப்புறுதித் தொகையை அதிகரிக்காமல் அந்தப் பணத்தை ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பயன்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை ரூபா 200000 இலிருந்து 350000 வரை உயர்த்துவதற்கான திட்டத்தை உறுப்பினர் ஒருவர் முன்வைத்த போது, சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கவுள்ள அதிசொகுசு வீட்டுத் தொகுதி, நீச்சல் தடாகம், மனோவியல் விருத்தி நிலையம், பூந்தோட்டம் ஆகியவற்றுடன் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும், அதற்காக அப்பாவி மக்களின் பணமே செலவளிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, தனக்கு வழங்கப்படவுள்ள அதிசொகுசு வீட்டுக்காக செலவுசெய்கின்ற கோடிக்கணக்கான பணத்தொகையை மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்குமாறு கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக