பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடவு தொடர்பாக, ஆலோசனை நடத்த சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு நடிகை குஷ்பு காலை 10.30 மணியளவில் வந்தார். சுமார் 20 நிமிடம் வரை கருணாநிதியின் இல்லத்தில் இருந்த குஷ்பு, 10.50 மணிக்கு வெளியே வந்தார்.
அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று
நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து குஷ்பு பேசும்போது, நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது 2004 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும் என்றார். பின்னர் தி.மு.க.வின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? என்று கேட்டதற்கு, அப்போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு ஊழல்தான் காரணம்? என்று சொல்லுகிறீர்களா? என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக