நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரக்கூடாது என்று தெரிவித்து சேலத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிதேவதை சிலைக்கு அருகில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேலம்,கருப்பூரை சேர்ந்த வெற்றிவேல் (வயது- 31) என்பவரே இவ்வாறு தீக்குளிக்க முற்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. ''கொடும்பாவி ராஜபக்ஷ இந்தியாவிற்கு வரக்கூடாது உள்ளிட்ட கோஷங்களை
முழங்கியபடி தன் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீவைத்து கொள்ள முயற்சித்துள்ளார். பொதுமக்கள் அங்கு திரண்டு அவரை தீவைக்கவிடாது காப்பற்றியுள்ளனர். உடனே பொதுமக்கள் வெற்றிவேலை சேலம் அஸ்தம்பட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ''நான் கட்டட வேலைக்கு சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவிற்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ வரக்கூடாது. அவர் இந்தியா வருவது என்னை போல் பலருக்கு பிடிக்கவில்லை, என் எதிர்ப்பை தெரிவிக்க தீக்குளிக்க முயற்சித்தேன் என்று வெற்றிவேல் பொலிஸாரிடம் தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.......!!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக