கன்னியாகுமரி அருகே கடந்த புதன்கிழமை இந்தியக் கடலோரக் காவல்படையால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேரையும் அடுத்தமாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இராமநாதபுரம் நீதிவான் நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது. மீன்கள் இனப்பெருக்கக் காலப் பகுதியாகையால் தமிழ் நாடு கிழக்குக் கடலோரப் பகுதியில் 45 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதித்க்கப்பட்டிருந்தது. இத்தடையை மீறி இவர்கள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தூத்துக்குடி
கரையோரப் பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 13 சிங்களவர்களும் ஒரு தமிழரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கரையோரப் பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 13 சிங்களவர்களும் ஒரு தமிழரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக