இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெருன்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இருபது வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி, குஜராத்,ராஜஸ்தான்,உத்தரகாண்ட்,இமாச்சல் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய 6 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி 100% வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள 7 இடங்களிலும், குஜராத்தில் உள்ள 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளிலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் மோடியின் அலை நாடு முழுவதும் பரவியிருந்தாலும், அந்த அலை தமிழகத்தை மட்டும் தாக்கவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றி இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக