சனி, 17 மே, 2014

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஞாபகார்த்த முத்திரை சுவிஸில் வெளியீடு....!!!!!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஞாபகார்ததமாக சுவிட்சர்லாந்தில் இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் ஒன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் படமும், மற்றையதில் ஈழ வரைபடமும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய முத்திரை ஒரு பிராங்க் பெறுமதியையும், ஈழ வரைபட முத்திரை எண்பத்தி ஐந்து சத பிராங்க் பெறுமதியையும் கொண்டுள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இயங்கும் விடுதலைப் புலிகளின் வலையமைப்பின் ஊடாக இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்காத நாடுகளில் சுவிட்சர்லாந்தும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக