இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவர் அமெரிக்காவில் ஆடம்பர மாளிகையொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சொந்தமான சிங்கள இணையத்தளம் ஒன்றிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் தனது மகளுக்காக குறித்த அமைச்சர் இந்த வீட்டைக் கொள்வனவு செய்திருப்பதாகவும், அந்த
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென அவர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளார். இது இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் 13 கோடி ரூபாவாகும்.
இவ்வாறான பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு அமெரிக்காவில் இலகுவாக குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைச்சர் தொடர்பாக மேலதிக விபரங்கள் இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும் அவர் அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக