வியாழன், 29 மே, 2014

ஜப்பானில் முட்டைவீசிய இலங்கையர் உட்பட மூவர் கைது!!

வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டை, கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இலங்கையர் உட்பட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 மற்றும் 19 வயதான இந்த இளைஞர்கள் இலங்கை, வியட்நாம் மற்றும் நேபாள் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என டோசு சாகா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்கள் காரில் இருந்தவாறு வெளிநாட்டு மாணவர்கள் மீது பல முறை முட்டைகளை வீசியுள்ளனர். கடந்த
20ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் மூன்றாவது நபர் தனக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக