மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 21-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஹசீனா, இந்தியா-வங்காளதேச நட்புறவு மேலும் வலுவடையும் என்றும், வரும் நாட்களில் இந்தியா மிகவும்
நட்பு நாடாக விளங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோடி, தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக தங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்றும் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, அரசுமுறைப் பயணமாக தங்கள் நாட்டிற்கு வரும்படி கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக