வெள்ளி, 2 மே, 2014

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் மூக்கு, காதை வெட்டிய பெற்றோர் கைது…!!

ஆப்கானிஸ்தானில் மதகுரு ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை வெட்டிவிட்டனர்.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். தலீபான் அரசு 2001 ம் ஆண்டு கவிழ்ந்ததை அடுத்து அமெரிக்கா தலைமையிலான படை
அங்கு கால்பதித்ததும் வன்முறைகள் சற்று அடங்கியது.
விரைவில் அமெரிக்க படை அங்கிருந்து வெளியேறலாம். இந்நிலையில் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதகுருவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
4 மாதங்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இஸ்லாமிய மதகுரு முல்லாக்கை தங்களது வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை அன்று விருந்திற்கு அழைத்துள்ளனர்.
முல்லாக் விருந்துக்கு சென்றபோது அவரது மூக்கு மற்றும் காதை சிறுமியின் தந்தை அப்துல் காதர் வெட்டிவிட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘வெட்டிய காதை பூனை சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு அதுபற்றி தெரியாது, ஆனால் நான் வெட்டிய மூக்கு தரையில் கிடந்தது’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து மாகாண போலீசார் பெற்றோர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியின் பெற்றோர்கள் மதகுருவின் கையை கட்டிவிட்டு மூக்கு மற்றும் காதை வெட்டியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மதகுருவோ நான் எந்த ஒரு பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
அவருக்கு எதிராகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சர்வதேச படைகள் வெளியேறுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக