வெள்ளி, 2 மே, 2014

நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் விற்பனை…!!

நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்ட இந்தப் பெண்கள் 12 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நைஜிரிய
மனித உரிமைக் குழுவொன்று கூறியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாடசாலையொன்றில் இருந்து 200 க்கும் அதிகமான பாடசாலை சிறுமிகள் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது
எனினும் இந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடத்தப்பட்ட பெண்களை மீட்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தெரிவித்து மக்கள் நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக