அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, பதுளை, மாத்தளை, நுவரெலியா மற்றும் கண்டி பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக அனர்த்த
முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு, கல் சரிவு மற்றும் அணைக்கட்டுகள் உடைப்பெடுத்தல் ஆகிய அபாயங்கள் குறித்த மாவட்டங்களில் உள்ளதாக அந்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மாவட்ட மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக