இராஜ தந்திரங்களை எப்போதும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. சில வேளைகளில் காலம் கடந்தும் சில வேளைகளில் புரியாமலும் போனதுண்டு.
இந்த மகிந்த அரசின் இராஜ தந்திரங்கள் ஜெயவர்த்தனையும் விட விஞ்சிவிடும் போலுள்ளது. சிராணி பண்டாரநாயக்கா, சமுர்த்தி சட்ட மூலத்திற்கும் மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பான சட்டத்திற்கும் எதிராக இருந்த காரணத்தினால் அவரையே பதவியில் இருந்து பேரினவாத மகிந்த அரசு தூக்கினர்.இதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கைகொடுத்தது. இதற்கு பெரியளவில் ராஜதந்திரம் ஒன்றும் மகிந்தவுக்கு தேவைப்படவில்லை. '
ஆனால் "கெசினோ" சட்டமூலத்திற்கு நாட்டு மக்கள் எதிராக இருப்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காகக மகிந்த அரசு பொது பல சேனாவை மீண்டும் தூண்டிவிட்டு, வில்பத்து நாடகத்தை அரங்கேற்றிவிட்டு நாட்டு மக்கள் தொடக்கம் ஊடகங்கள் வரை வில்பத்து நாடகத்தின் பார்வையாளராக்க இந்த பேரினவாதத்தால் முடிந்தது. வில்பத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில் மௌனித்துப் போயிருந்த "கெசினோவை" மௌனமாக எடுத்து சத்தமில்லாமல் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் முன்னரே வெற்றிகரமாக நாடாளுமன்றில் நிறைவேற்றியுள்ளனர்.
இயக்குனர் மகிந்தவின் வழிகாட்டலில் சிறப்பாக நடித்திருந்த பொதுபல சேனாவும்,அமைச்சரும் விருதினைப் பெற தகுதியானவர்கள்.
பொதுபல சேனாவின் அடுத்த அட்டகாசம் தொடங்கும் வேளையில் மீண்டுமொறு சட்ட மூலத்தை எதிர்பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக