யுத்தத்தினால் கணவர்களை இழந்து விதவைகளாக்கப்பட்ட 5646 பெண்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 1888 பெண்கள்
இம்மாவட்டத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிலும், ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களிலும், தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் இவர்கள் வேலைக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், தன்னார்வு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சுயதொழில் உதவிகள் கடன்கள் மூலம் சுயதொழில்களையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக