அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும்
படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படவில்லை.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று காலை கோப்பாய் காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டு, அச்சுவெலி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கொலைகள் தொடர்பான விசாரணைகளின் போது ; குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததினையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
தர்மிகா திருமணமாகி ஒரு பிள்ளையின் தயாராவர். இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவன் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டிக்கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
அதேவேளை சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலைகளை செய்து விட்டு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்திருக்கலாம் என அயலவர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக