ஞாயிறு, 4 மே, 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைகள் குறித்து இந்த மாதத்தில் அறிவிக்கப்படும்!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் இந்த மாத இறுதியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைக் குழுவொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள்
மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணை நடாத்துதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், சர்வதேச சுயாதீன விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக