ஞாயிறு, 4 மே, 2014

உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்!!!

உலக செஞ்சிலுவை தினம் மே மாதம் 8 ஆம் திகதி அனுஸ்ரிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த விழிர்ப்புணர் ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.

'இளைஞர் சக்தியை வலுவூட்டி சமூகத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தி நீடித்து நிலைத்திருக்கும் சமூக அபிவிருத்தியை நிலை
நாட்டுதல்' எனும் கருப்பொருளில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

-மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையில் குறித்த ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.பின் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.பரமதாஸ் அவர்களை வரவேற்றார்.

குறித்த ஊர்வலத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,புத்தளம், அனுராதபுரம் ஆகிய 7 மாவட்டஙகளைச் சோந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள் பணியாளர்கள் என சுமார் 500 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

-இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையில் இடம் பெற்ற குறித்த ஊர்வலத்தில் செயலாளர் கே.ரவிசங்கர்,கிளை நிறைவேற்று அதிகாரி எஸ்.குகன்,முக்கிய பிரமுகர்களான இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவரும், பதில் நீதவானுமாகிய அன்ரன் புனிதநாயகம்,தேசிய தலைமையகத்தின் மத்திய ஆளுனர் சபை அங்கத்தவர் சாள்ஸ் கொரையா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக