கரிபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்தி நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரோசியாவு என்ற கடற்கரை நகரம் உள்ளது. இங்கு நிகழ்ந்த பஸ் விபத்தில் 23 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு தீபகற்பத்தின் மேற்கு முனைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஹெய்தி நாட்டில் கடந்த 2010&ம் ஆண்டு நிலநடுக்கம் நிகழ்ந்த பின்னர் சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. மோசமான சாலை வசதிகளே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக