வெள்ளி, 16 மே, 2014

கிளிநொச்சி ரயில் நிலைய கிணற்றில் இருந்து 13 கிளைமோர் குண்டுகள் மீட்பு!!

கிளிநொச்சி ரயில் நிலைய கிணற்றிலிருந்து 13 கிளைமோர் குண்டுகளும் அவற்றை தூர இருந்து இயக்கும் ஆளி ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. கடந்த மாதம் 15ஆம் திகதி குறித்த கிணற்றைத் துப்புரவு செய்த வேளையில் 2 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டது. அதனையடுத்து துப்புரவுப் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் பொலிசார் மற்றும்
இராணுவத்தினர் முன்னிலையில் துப்புரவுப் பணி இடம்பெற்றபோதே கிணற்றில் இருந்து 750 கிராம் எடைகொண்ட 10 கிளைமோர், 1500 கிராம் எடைகொண்ட 3 கிளைமோர் குண்டுகள் என்பன மீட்கப்பட்டன. குண்டுகள் மீட்கப்பட்ட இடத்தில் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட குண்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக படையினர் குறிப்பிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக