சனி, 13 நவம்பர், 2010

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளது..!

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பiர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தினை கட்சியின் அதியுயர்பீடம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10ம் திகதி ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதையடுத்து 11ம் திகதி கட்சியின் அதியுயர் பீடம் கூடியது. இதன்போது இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்வரும் 16ம் திகதி பாராளுமன்றத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் தனது உரையின்போது இதனை அறிவிக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக