
வடபகுதி வைத்தியசாலைகளுக்கென மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளும், இரண்டு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் இன்று கையளிக்கப்படவுள்ளன. வவுனியாவிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின்போது வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்த வாகனங்களை இன்று கையளிக்கவுள்ளார். அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வண்டிகளுக்கென வடமாகாண சபை 150லட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு அம்பியுலன்ஸ் வண்டிகளும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக