திங்கள், 8 நவம்பர், 2010
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற்பரப்பு கொந்தளிப்பு..!
ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற் பரப்பு இரண்டொரு தினங்களுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்று தெரிவித்துள்ளார். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு கடல்பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்றுவிட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற்பரப்பில் தொடராக இடிமின்னலுடன் மழைபெய்யும் அதேநேரம் இக் கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். காற்று வடமேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக