சனி, 13 நவம்பர், 2010

அல் ஜசீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை இலங்கை நிராகரித்துள்ளது..!

அல் ஜசீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் காரணம் அறிவிக்காமல் நிராகரித்துள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிசெய்துள்ளது. இலங்கை யுத்தத்தின் இறுதியில் எடுக்கப்பட்டதாக கூறி பலர் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பியிருந்தது. மேற்படி புகைப்படங்கள் உண்மையானவை அல்லவென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக