சனி, 2 அக்டோபர், 2010

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் இருக்கமாட்டாது-வடமாகாண ஆளுநர்..!

யாழ். வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும். வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார். வலி. மேற்கு பிரதேசத்தின் தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்பாடு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும். பயன்படாத தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளையும் உட்கட்டுமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம் என பட்டியல்படுத்த வேண்டும். அதற்கான நிதி மூலாதாரங்களைத் தேடும் பணியைப் பொருளாதார அபிவிருத்தி நிபுணர் எந்திரி ஆர்.ரி.இராமச்சந்திரன் பொறுப்பில் விடப்படுகின்றது. தரிசுநில பயன்பாடு அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டத்தில் விரைவில் துறைசார்ந்த அமைப்புக்களை திரட்டி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக