ஞாயிறு, 3 அக்டோபர், 2010
அக்குறணை மோட்டார் சைக்கிள் விபத்து, ஒருவர் பலி, ஒருவர் காயம்..!
கண்டி, அக்குறணை 6ம்கட்டையில் நேற்றுக்காலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றுக்காலை 8மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதின. இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளொன்றில் பயணம் செய்தவர் அருகில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றின் கீழ் தூக்கி வீசப்பட்டார். இதனால், பஸ்ஸின் கீழ் அகப்பட்டவர் அந்த இடத்திலேயே மரணமானாரென நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரும், காயமடைந்தவரும் அக்குறணை மத்திய கல்லூரி மாணவர்களென பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் க.பொ த. (உ,த) வகுப்பு மாணவனான மொஹமட் சஹ்ரான் என்பவரே உயிரிழந்தவராவார். இவர் அக்குறணை தெல்கஸ்தென்னயை வசிப்பிடமாகக் கொண்டவராவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக