சனி, 23 அக்டோபர், 2010

எழுத்துமூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா நிபுணர்குழு அழைப்பு..!

இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போது சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டம் என்பன மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுவானது எழுத்து மூல அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. அறிக்கை சமர்ப்பிக்க விரும்புவோர் 10 பக்கங்களுக்கு மேற்படாத வகையில் எழுத்துமூல அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும். சாட்சியத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபுணர்குழு கூறியுள்ளது. இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூகி தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர் குழுவானது 2010 டிசம்பர் 15ம் திகதிவரை அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும். அறிக்கைகளை கச்ணழூடூ ணிழூ ழூதுணீழூணூவண் ணூழூஞ்டிண்வணூதூ@தண.ணிணூஞ் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும். நிபுணர் குழுவுக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இரகசியமான முறையில் பேணப்படும் என்று ஐ.நா. கூறுவதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது 2009 மேயில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைஉறுதிப்பாட்டை எவ்வாறு முன்னகர்த்துவதென்பது தொடர்பாக கலந்துரையாடியிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் பி.பி.சி.யின் சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார். இலங்கைக்கு செயலாளர் நாயகம் விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பதிலளிக்கும் கடப்பாடு, நல்லிணக்கம், அரசியல் இணக்கப்பாடு தொடர்பாக அவர் கலந்துரையாடியிருந்தார் என்று பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக