முல்லைத்தீவு, உடையார்கட்டு குளக்கட்டை அண்டி அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, புலிகளின் வான்படைப் பிரிவுக்குச் சொந்தமான 75 கிலோ மற்றும் 50 கிலோ நிறைகளைக் கொண்ட 11 விமானக்குண்டுகள் யாழ். பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குற்ற விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன. நான்கு அடி நீளத்தையும் 2லீஅடி சுற்றளவைக் கொண்டதுமான 75 கிலோ நிறைகொண்ட 4 விமானக் குண்டுகளும், ஏறக்குறைய அதே அளவுகளைக் கொண்ட 50 கிலோ எடையுள்ள 7 விமானக் குண்டுகளும் இவ்விதம் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று மேற்படி பொலிஸ்குழு தெரிவித்துள்ளது. மேலும் யுத்தம் நிலவிய கால கட்டத்தில் புலிகள் அமைப்பு தமது இலகுரக விமானங்கள் மூலம் தெற்கின் பொருளாதார இலக்குகள்மீது நடத்திய தாக்குதல்களில் இவைபோன்ற குண்டுகளையே பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்தகைய விமானக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக