திங்கள், 4 அக்டோபர், 2010
நாடு கடந்த தமிழீழ இராச்சிய 1வது பிரதமராக உருத்ரகுமாரன் தெரிவு..!
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் முதலாவது பிரதமராக விஸ்வநாதன் உருத்ரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகம் வெளியிட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற அமர்வுகளின்போது பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நடைபெற்றுள்ளன. புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரான எருத்ரகுமார் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய புலம்பெயர் தமிழர்கள் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பிளாஸா ஹோட்டலில் இந்த அமர்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த அமர்வுகளில் சில வெளிநாட்டு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. டெலி கொன்பரன்ஸ் முறையின் அடிப்படையில் பிரான்ஸ், லண்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் அமைக்கும் திடட்ம் குறித்த வாக்கெடுப்பில் மோசடிகள் இடமபெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக