களுத்துறை மாவட்டம் பேருவளை நகர சபைக்கு உட்பட்ட சீனன்கோட்டை வீதி 01 கோடி 40 லட்சம் (1,40,00000) ரூபா செலவில் காப்பட் முறையில் புனரமைக்கப்படவுள்ளது. மேல் மாகாணசபை உறுப்பினரும் களுத்துறை மாவட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான எம். எம். எம். அம்ஜாத் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக இந்த வீதி நவீனமுறையில் புனரமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி காலை வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பேருவளை நகரசபை எதிர்க்கட்சித்தலைவர் இர்பான் முர்சி தெரிவித்துள்ளார். பேருவளை நகர சபையின்கீழ் உள்ள இந்த வீதியை மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாதின் வேண்டுகோளின் பேரில் மாகாண சபை பொறுப்பேற்று வீதிப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பேருவளை நகரிலிருந்து சீனன் கோட்டை பிடவலை பாலம்வரை முதற்கட்டமாக கார்பட் இடப்பட்டு புனரமைக்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக பிடவலை பாலம் முதல் அம்பேபிடிய சந்திவரை காப்பட் இடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக