ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணம்..!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா இன்றுகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 37. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சொர்ணலதா 1989ம் ஆண்டு முதல் 21 வருடங்களாக பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய்மொழியான மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, உருது, முதலான மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா... பாடல் மூலம் சொர்ணலதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் மாலையில் யாரோ மனதோடு பேச.என்ற பாடலைப் பாடியதன் மூலம் சொர்ணலதா பிரபலமானவர். பாரதிராஜாவின் கறுத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய போறாளே பொன்னுத்தாயி... பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக