வெள்ளி, 10 செப்டம்பர், 2010

மங்கள பின்னணியில் அச்சிடப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான போஸ்டர்களை மீட்க நடவடிக்கை..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஜே.வி.பி.க்கு சொந்தமான அச்சகமொன்றில் அச்சிடப்பட்டதாகவும் இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு, நுகேகொட, தெல்கந்தையில் உள்ள மேற்படி அச்சகத்துக்கு மங்கள சமரவீரவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சுதத் சந்திரசேகரவும் மேற்கூறிய அவதூறு போஸ்டர்களை அச்சடிக்க 55 ஆயிரம் ரூபாவை முற்பணமாக கொடுத்திருப்ப தாகவும் அந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இத்துடன், கடந்த புதன்கிழமை (08) ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவதூறு போஸ்டர்கள் மற்றும் கொடும்பாவிகள் ஆகியவை மங்கள சமரவீரவின் கண்காணிப்பின் கீழேயே உருவாக்கப்பட்டதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. மேற்கூறிய அவதூறு போஸ்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக் கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தேடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக