வெள்ளி, 10 செப்டம்பர், 2010

புலிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வழங்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்..!

புலிகளுக்கு பாதுகாப்பு தரப்பு தொடர்பான தகவல்களை வழங்கிய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 23ம்திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனி திஸ்ஸ மின்நிலையப் பிரிவில் பணியாற்றிய இராணுவத்தினரால் குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் கொழும்பில் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறித்த நபர் ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக