புதன், 29 செப்டம்பர், 2010

விளம்பரத் தூண் மீதேறி ஆர்ப்பாட்டம் செய்தவர் பிணையில் விடுதலை..!!

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகிலுள்ள விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்திய நபர், பிணையில் செல்ல கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 15 ஆம் திகதி குறித்த நபர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் வரை போராடப் போவதாகக் கூறி, விளம்பரத் தூண் மீதேறி ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். 18 மணிநேரத்தின் பின்னர் தரையிறக்கப்பட்டு இவர் கைது செய்யப்பாட்டார். இவரை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக