வெள்ளி, 10 செப்டம்பர், 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன நேற்றையதினம் நடைபெற்ற 18ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அதிகம் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுடன் தமக்கு உடன்பாடு கிடையாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீ.பியசேன, அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக