
ஆனால், கிளர்ச்சி படிப்படியாக வேகம் பெற்று வருகிறது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான முறையில் சுடப்பட்ட கத்தியா சவாஸ்திபோல் இன்று மரணமடைந்தார்.
இதனால் தாய்லாந்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமாகி வன்முறைகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து இன்று நாடு முழுவதும் விடுமுறையை அறிவித்துள்ளது அந் நாட்டு அரசு. தாய்லாந்து நாட்டில் தட்சின் சினவத்ரா பிரதமராக ஆட்சி செய்துவந்தார். நீதிமன்றத் தலையீடு காரணமாக அவர் பதவி விலக நேர்ந்தது. அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதையடுத்து பிரதமராக அபிசித் வெஜ்ஜஜீவா பதவியேற்றார். ஆனால் தாய்லாந்து நாட்டின் கிராமப் பகுதிகளில் தட்சின் சினவத்ராவுக்கு ஆதரவு அதிகம். எனவே கிராமவாசிகள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி மார்ச் 12 முதல் தலைநகர் பாங்காக்கில் குவிந்து கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதில் கணிசமானவர்கள் பெண்கள் ,குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தட்சின் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால் அவருக்கு எதிராகவும் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவும் ஜப்பானும் செயல்பட்டு வருகின்றன. இந்த நாட்டு தூதரகங்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தான் போராட்டத்துக்கு தலைமை வகித்த மூத்த தலைவரான கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந் நாட்டில் கலவரம் மேலும் அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக