திங்கள், 17 மே, 2010

யுத்தகாலத்தில் திருமணம் செய்தவர்களுக்கு பதிவுத்திருமணம்..!!

வன்னிபோர் இடம்பெற்றபோத இடம்பெயர் முகாம்களுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்துக்கொண்டுள்ள பெரும்பாலான தம்பதியினர் தமது திருமணத்தை பதிவசெய்யாமல் உள்ளனர் எனவேஅவர்கள் திருமணங்களை முறையாக பதிவுசெய்து சட்டபூர்வமான முறையில் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை எடுத்துவருவதாகவும் ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார் இந்தத் தம்பதிகளில் பலரும் கோயில்களில் திருமணம் முடித்தவர்கள் என்றும் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இவர்களுக்கான திருமணப்பதிவு ஜூன் மாதம் 12ம் திகதி வவுனியா கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாம் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள இவர்கள் சேர்ந்து வாழ விரும்பினார் அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களை அழைத்து பேசி ஒன்று சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக