ஞாயிறு, 9 மே, 2010

ஏ.ஆர். ரகுமான் மகளுக்கு இதய ஆபரேஷன்..!!

ஏ.ஆர். ரகுமானின் 11 வயது மகள் ரஹீமாவுக்கு மும்பை மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. ரகுமான்&சாயிரா தம்பதிக்கு மகள்கள் கதீஜா, ரஹீமா, மகன் அமீன் உள்ளனர். ரஹீமாவுக்கு பிறவிலேயே இதயத்தில் குறைபாடு இருந்தது. இதையடுத்து தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். மும்பை பாந்த்ராவிலுள்ள ஏசியன் ஹார்ட் மருத்துமனையில் அவர் சேர்க்கப்பட¢டார். கடந்த புதன்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது ரஹீமா உடல¢ நலம் தேறி வருகிறார்.‘கடந்த மூன்று நாட்களாக, அன்பான அப்பாவாக எனது மகளின் அருகிலேயே இருக்கிறேன். இரவு முழுக்க தூங்கவும் இல்லை. இசை உட்பட எனது வேலைகள் எதிலுமே ஈடுபடவில்லை. இந்த நேரத்தில் ரஹீமாவுக்காக பிரார்த்தனை செய்த எனது குடும்பத்தார், நண்பர்கள், எனக்கு ஆதரவாக இருந்த மீடியா உட்பட அனைவருக்கும் நன்றி’ என ட்விட்டரில் ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக