செவ்வாய், 11 மே, 2010

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைச் செயற்குழுக் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறும்..!

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் ஜூன் 7ம்திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியை நாடளாவிய ரீதியில் மறுசீரமைக்கவும் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் வகையிலும் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜூன் 7ம் திகதிமுதல் ஒரு லட்சம் உறுப்பினர்களை கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 123 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன. இதன்படி தற்கால சமுகத்திற்கு ஏற்றவாறு கட்சியை சீரமைக்கவுள்ளோம். இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள இளைஞர்கள், கல்வியியலாளர்கள் போன்றோருக்கு பொறுப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வருடத்தினுள் ஒரு லட்சம்பேரை கட்சிக்கு சேர்க்கவுள்ளோம். இதற்கான நடவடிக்கை ஜூன்7ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக