வெள்ளி, 7 மே, 2010
திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான நேரடி பஸ் சேவை..!
இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதனைப் போக்குவரத்துச் சபையின் வட மாகாண பிராந்திய முகாமையாளர் கணபதிப்பிள்ளை கணேச பிள்ளை வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போ யுத்த சூழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவுக்கான நேரடி பஸ் சேவை இடம்பெறும். இதேவேளை பருத்தித்துறைக்கும் - கொழும்புக்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படும். பருத்தித்துறைம் - கொழும்பு பஸ் சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.எனவே மக்களின் வேண்டு கோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பலாலி, தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக