சனி, 8 மே, 2010
பயங்கரவாதத்ததை தூண்டும் வகையில் செயற்படும் அமைப்புகளை உடனடியாக கைது செய்ய உத்தரவு..!!
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது இவ்வாறு அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்படவிருந்த பேரணி ஒன்றிணையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர். வடக்கில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்களுக்கு இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு புலி ஆதரவாளர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர் இதேவேளை வடக்கு நீதவான் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த தமிழ் கட்சி ஒன்றின் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக