சனி, 20 மார்ச், 2010

பான் கீ மூனுடன் அரசாங்கம் எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை -.ரோகித்த போகொல்லாகம..!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கீ மூனுடன் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்தபோகொல்லாகம தெரிவித்துள்ளார் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார் பான் கீ மூனின் தீர்மானம் இலங்கைக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உறுப்புநாடு என்றவகையில் ஐக்கிய நாடுகளின் ஏழாவது பிரகடனத்தின் அடிப்படையில் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பாதுகாப்புசபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஒப்புதல் இன்றி பான் கீ மூனின் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக