அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் சில பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறையுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி அமைச்சர் விளக்கினார்.
இதன்படி பெற்றோல் டீசல் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீதான வரிகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.இதேவேளை நாட்டரிசி-45 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு அரிசி 56 ரூபாவிலிருந்து 52.50 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி 69.50 சதத்திலிருந்து 65 ரூபாவாகக் குறைக்கப் பட்டுள்ளது. உருளைக்கிழங்கு 58 ரூபாவிலிருந்து 52 ரூபாவாக குறைக்கப்பட்டிருக்கிறது. மீன்ரின் விலை 149 இல் இருந்து 130 ரூபாவாகவும் கடலை 139 ரூபாவிலிருந்து 137 ரூபாவாகவும் நெத்தலிக்கருவாடு 270 ரூபாவிலிருந்து 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த நிர்ணயிக்கப்பட்ட விலைக ளில் சதொச மற்றும் கோப்சிட்டி களில் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்த அமைச்சர் ஐ.தே.க. கூறிவரும் பொய்ப் பிரசாரங்களை நம்பவேண்டா மெனவும் கேட்டுக் கொண்டார்.
முற்றிலும் தவறான பிரசாரத்தை ஐ.தே.கட்சி செய்து வருகின்றது. அவ்வாறு இல்லை. யுத்தத்தின்போது பாதுகாப்புச் செலவினங்களுக்கு பாரிய நிதி செலவு செய்யப்பட்டது. இப் பொழுது இப்பணம் செலவிடத் தேவையில்லை. அதன் பயனாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக