திங்கள், 22 மார்ச், 2010

சுவிஸில் இருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்..!!

அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை சுவிஸ்லாந்து அரசு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது சுவிஸ்லாந்தின் சூரிச் நகர விமான நிலையத்தில் நைஜீரிய நபர் ஒருவர் இறந்தது குறித்த விசாரணைகள் முடிவடையாமல் உள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் குற்றங் காணப்பட்டிருந்த அந்த நபரை லாவோஸ_க்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் அவரை கட்டிவைத்ததன் காரணமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்த நெருக்கடிகளை சமாளிக்கவே தற்காலிகமாக தஞ்சம் மறுக்கப்பட்டவர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் இருந்தவர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்ததெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக