சனி, 20 மார்ச், 2010

புளொட் தலைவர் தலைமையிலான முக்கியஸ்தர்கள் வற்றாப்பளைக்கு விஜயம்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவனேசன் (பவன்) தலைமையிலான குழுவினர் வன்னியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக நேற்றையதினம் மன்னாரின் வௌ;வேறு கிராமங்களுக்கும் விஜயம் செய்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இந்நிலையில் இன்றையதினம் முல்லைத்தீவின் வற்றாப்பளைக்கு விஜயம் செய்திருந்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் (பவன்) உள்ளிட்ட பிரதிநிதிகள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளனர். மற்றும் இங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களில் தாம் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதுடன், அவர்களின் விடயங்களில் கூடியளவு பங்களிப்பினைச் செலுத்தி வருவதாகவும், இந்நிலையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் மக்களின் துரித மீள்குடியேற்றம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை இன்னும் துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக இருக்குமென்றும், எனவே பொதுத் தேர்தலின்போது புளொட் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக