திங்கள், 4 ஜனவரி, 2010

இந்தியா உடன் தலையிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!!

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் தமது பாரம்பரிய வதிவிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு இந்திய மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. முகாம்களிலுள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் துன்பகரமானதாக இருப்பதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இலங்கை அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் முகாம்கள் தடுப்பு முகாம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே முகாம்களிலுள்ள தமிழர்கள் விடயத்தில் இந்தியா தலையிடாவிட்டால் வரலாறு இந்தியாமீது குற்றம் சுமத்தும். தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு விடயத்தை சர்வதேச மட்டத்திற்கு இந்தியா தீவிரமாக எடுத்துச் செல்லவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக