வியாழன், 7 ஜனவரி, 2010
முஸ்லிம்களுக்கு அதிக சேவைகள் புரிந்த ஒரேதலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே-அமைச்சர் பௌசி..!!
முஸ்லிம்களுக்கு அதிக சேவைகள் புரிந்த ஒரேதலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேயாவார் என பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளாhர். கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது ஜனாதிபதி அதிர்ஷ்டமுள்ளவர். அதனால்தான் அவரது ஆட்சி காலத்தில் நாட்டில் எண்ணெய்வளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவரது தலைமையில் எமது இலங்கை நாடு ஆசியாவின் தனவந்த நாடாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்லவே எமது ஜனாதிபதி மக்களின் ஆணையை மீண்டும் கேட்கிறார். ஆனால் எதிர்க் கட்சிகளோ பழிவாங்கும் மேசமான அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அதனால் நாடு முன்னேறாது. அதல பாதாளத்துக்கே செல்லும். இதனை நாட்டு மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பர். எனவே இம்மாதம் 27 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மிகவும் பலம் வாய்ந்த பொருளாதாரக் கொள்கையொன்று இந்த நாட்டில் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக