வெள்ளி, 8 ஜனவரி, 2010

வன்கூவர் சிறையிலுள்ள எஞ்சிய இலங்கையர்களை தொடர்ந்தும் தடுத்துவைக்க கனடா முயற்சி..!!

கனடாவின் வன்கூவர் சிறையிலுள்ள எஞ்சிய இலங்கையர்களை கனடா அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்துவைக்க முயற்சிப்பதாக கனேடிய ஊடகச் செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் இலங்கையிலிருந்து ஓசியன்லேடி கப்பலில் 76இலங்கையர்கள் கனடா சென்றிருந்தனர். அவர்களில் 35பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் எஞ்சியுள்ளவர்களில் சுமார் 25பேரை தொடர்ந்தும் சிறைப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தம்மிடம் போதிய உறுதிப்படுத்தல் ஆவணங்களைக் கொண்டிருந்ததாக டக்ளஸ் கோர்னர் என்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனினும் எஞ்சியுள்ளவர்களிடம் அவ்வாறான எவ்வித உறுதிப்படுத்தல் ஆவணமும் காணப்படவில்லையென்பதால் அவர்களை உடனடியாக விடுவிப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த 25பேரும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக